இந்த தீபாவளியில் 12 ராசிக்கும் அதிர்ஷ்டத்தை அளிக்கப் போகும் நிறம் என்ன தெரியுமா?
தீபாவளி என்பது இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகு.
மக்கள் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் அதனை கொண்டாட விரும்புகிறார்கள்.
இந்த தீபாவளிக்கு என்ன அணிய வேண்டும் என்பதில் உங்களுக்கு இன்னும் குழப்பம் இருந்தால், நட்சத்திரங்களின் படி, இந்த பண்டிகைக் காலத்தில் உங்களுக்கு ஏற்ற நிறம் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
தீபாவளி நாளில், சிவப்பு மற்றும் தங்க நிறம் மேஷ ராசியினருக்கு உகந்த வண்ணங்கள். சிவப்பு நிறத்தை அணிந்தால் லட்சுமி அன்னையின் அருள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தீபாவளி நாளில் வெள்ளை மற்றும் நீல நிறங்கள் உகந்தவை. இந்த நிறத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மகிழ்ச்சியும் செழிப்பும் எப்போதும் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தீபாவளியன்று ஆரஞ்சு நிறத்தை அணிவது நல்லது. ஆரஞ்சு நிறம் மங்களத்தின் சின்னம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் தீபாவளி நாளில் வெள்ளை நிறத்தை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சாஸ்திரங்களில் கடக ராசிக்கு அதிபதி சந்திரனாகக் கருதப்படுகிறார்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தீபாவளியன்று பிரவுன் அல்லது மெரூன் நிற ஆடைகளை அணிய வேண்டும். இதனால் லட்சுமி தேவி மிகவும் மகிழ்ச்சி அடைவார்.
கன்னி
தீபாவளியன்று கன்னி ராசிக்காரர்களுக்கு பச்சை நிறம் உகந்தது. ஏனெனில் பச்சை நிறம் இயற்கையோடு நேரடியாக தொடர்புடையது.
துலாம்
தீபாவளியன்று துலாம் ராசிக்காரர்கள் இளஞ்சிவப்பு மற்றும் பிரகாசமான வெள்ளை நிறங்களை அணிய வேண்டும்.
விருச்சிகம்
தீபாவளியன்று மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆடைகளை அணிவது எப்போதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தீபாவளியன்று மஞ்சள் மற்றும் தங்க நிற ஆடைகளை அணிய வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தீபாவளியன்று வெள்ளை, ஊதா அல்லது நீல நிறத்தை அணிவது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். மகர ராசிக்கு அதிபதி சனி என்பதால், அவருக்கு கருப்பு மற்றும் நீல நிறங்கள் மிகவும் பிடிக்கும்.
கும்பம்
தீபாவளியன்று கும்ப ராசிக்காரர்கள் சாம்பல் நிற ஆடைகளை அணிய வேண்டும். ஏனெனில் சாம்பல் தீமைகளை அழிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிறத்தை அணிவதால் எதிர்மறைகள் ஆற்றல்கள் விரட்டப்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும். மீன ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் அருள் எப்போதும் இருக்கும். தாய்க்கு இளஞ்சிவப்பு நிறம் என்றால் மிகவும் பிடிக்கும்.