புடவைக்காக அரங்கேறிய சண்டை! முடியை பிடித்து நடந்த கொடுமை
பெங்களூரில் தள்ளுபடி விற்பனையில் பெண்களுக்குள் சண்டை ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தள்ளுபடியில் பட்டுப்புடவை
பெங்களூருவின் மல்லேஸ்வரத்தில் ஆண்டுதோறும் பட்டுப்புடவை விற்பனை நடைபெற்று வரும் நிலையில், புடவையை வாங்குவதற்கு பெண்கள் போட்டி போட்டு வருவார்கள்.
டுவிட்டரில் வைரலாகும் காணொளி ஒன்றில், புடவைக்காக இரு பெண்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும், முடியை இழுத்துக் கொண்டும் சண்டையிடுவதை பார்க்கமுடிகிறது.
ஆனால் ஒருபுறம் சண்டை நடந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் இதனை கண்டுகொள்ளாமல் சில பெண்கள் புடவை வாங்குவதில் பரபரப்பாக இருந்தனர்.
பின்பு காவல்துறையினர் வந்து குறித்த பெண்களின் சண்டையை நிறுத்தியுள்ளனர்.
Mysore silk saree yearly sale @Malleshwaram .. two customers fighting over for a saree.??♀️RT pic.twitter.com/4io5fiYay0
— RVAIDYA2000 ?️ (@rvaidya2000) April 23, 2023