Reels அதிகமாக பார்ப்பவர்களை தாக்கும் அரிய நோய்.. இனி ஜாக்கிரதை
சமூக வலைத்தளங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது.
யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பயனர்களின் அதிகம் கொண்ட சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் எனப்படும் குறுகிய வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகின்றன.
தற்போது இது, மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டன. பொழுதுபோக்கிற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த நுட்பம் நாளடைவில் பல நோய்களுக்கு காரணமாக இருக்கிறது.
Reels அதிகமாக பார்ப்பவர்களுக்கே தெரியாமல் அவர்கள் தினம் தினம் அதற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் நேரம் பார்ப்போம் என ஆரம்பிக்கும் பொழுது பல மணித்தியாலயங்களை கடந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்.

அந்த வகையில், அதிகமான நேரம் Reels பார்ப்பவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள் பற்றி தொடர்ந்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
Reels பார்ப்பவர்களுக்கு வரும் பாதிப்புக்கள்
1. Reels அதிகமாக பார்க்கும் பழக்கம் கொண்டவர்கள் அதனை கட்டுப்படுத்தாவிட்டால் மன அழுத்தம் அதிகமாவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏனெனின் சந்தோஷம், கோபம், கவலை என அடுத்தடுத்து உணர்வுகளை மாற்றிக் கொள்ளும் காணொளிகளை பார்க்கும் பொழுது நமது மூளை என்ன செய்வது என தெரியாமல் சோர்வாகும். இதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும்.

2. சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்களுக்கு தெரிந்த விடயங்களை அதிகமாக பகிர்ந்து கொள்கிறார்கள். இதனை அதிகமாக பார்க்கும் ஒருவருக்கு ஒரு வகையான குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். ஒரு காணொளியில் சரி எனக் கூறப்பட்ட விடயம் மற்றுமொரு காணொளியில் தவறாக காட்டப்படும். இது உங்கள் வாழ்க்கையில் ஒருவித குழப்பத்தை உண்டு பண்ணும்.
3. ஆய்வுகளின்படி, Reels அதிகமாக பார்ப்பவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது என கண்டயறியப்பட்டுள்ளது.

4. Reels பார்த்துக் கொண்டு வேலைச் செய்யலாம் என ஒரு பக்கம் அதனை போட்டு வைத்து வேலைகளை செய்வார்கள். ஆனால் அவர்கள் செய்யும் வேலையை சரியாக செய்ய முடியாது. கவனச்சிதறல் ஏற்பட்டு அவர்களின் வேலை கெட்டு விடும்.
5. இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் மறந்தும் Reels பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனின் Reels -ன் தாக்கம் தூக்கத்தின் தரத்தையும் குறைக்கும். சாதாரணமாக அல்லாமல் நரம்பு மண்டலத்தை தூண்டி, உடலை ஒருவித பதற்றமான நிலைக்கு கொண்டு செல்லும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |