நாம் தினமும் செய்யும் ஒரு தவறு! இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் தெரியுமா?
நம் உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணமே போதிய நீர்ச்சத்து இல்லாதது தான் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஏதோ ஒரு காரணத்தை காட்டி தண்ணீர் குடிக்காமல் இருப்பது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், ஒருவர் தினமும் குறைந்தது 1 1/2 லிருந்து 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
அப்போது தான் நம் உடலின் ஆரோக்கியம் பேணிப்பாதுகாக்கப்படும், ரத்த ஓட்டத்தை சீர் செய்ய, நம் உடலின் வெப்பநிலையை சீர் செய்ய என அனைத்திற்கும் தண்ணீர் இன்றியமையாத ஒன்று,
அதேவேளை அதிகளவு தண்ணீர் குடிப்பதும் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடுகிறது, சிறுநீரகம் தொடர்பான பல்வேறு நோய்களுக்கும் வழிவகுக்கிறது.

ஆம், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல், அளவுக்கு அதிகமான தண்ணீரும் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
மிக முக்கியமாக நின்று கொண்டு தண்ணீர் அருந்தவே கூடாது, தண்ணீரைப் பருகுவதற்கான சரியான வழி எப்போதும் உட்கார்ந்து கொண்டு தண்ணீரைக் குடிப்பது தான்.
நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது அது உங்கள் வயிற்றில் உள்ள உணவுக் குழாயின் பாதையில் நேரடியாக பயணிக்கிறது, இதன் காரணமாக உங்கள் வயிற்று பகுதி சேதமடைய வாய்ப்பு உண்டு.
Pic Courtesy - Michael Heim/Alamy
இதுதவிர சிறுநீரகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதால், சிறுநீரகங்கள் மெதுவாக செயல்படுவதை நிறுத்தி, நோய்களை ஏற்படுத்துகின்றன.
மூட்டுகளில் இருக்கும் வேதிப்பொருட்களின் சமநிலை மோசமடைவதால், மூட்டு தொடர்பான பிரச்சனைகள் வருகின்றன, இதனால் நம் சாப்பிடும் உணவு சரியாக ஜீரணிக்க முடியாமல் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் வரலாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்!!!!