இயக்குநர் வெங்கட் பிரபு இலங்கையில்...இது தான் காரணமா? இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி
தென்னிந்திய நடிகர் விஜய் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டருந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு கொழும்புக்கு வருகைதந்துள்ளார்.
இயக்குநர் வெங்கட்
இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் விஜய் 'தளபதி 68 ' படத்திற்காக கைகோர்த்துள்ளார். ‘தளபதி 68’ இன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் நடைபெற்று வருகிறது.
‘தளபதி 68 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளது.
படப்பிடிப்பு ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் ‘தளபதி 68’ படக்குழுவினர் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
இதனொரு அங்கமாக இயக்குனர் வெங்கட் பிரபு கொழும்புக்கு வந்து திரைப்பட வேலைகளை ஆரம்பித்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |