Photo Album: நடிகைகளை ஓவர் டேக் செய்யும் இயக்குனர் மனைவி- எப்படி இருக்காங்க பாருங்க
பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் மனைவி மோனிஷாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இயக்குநர் நெல்சன்
தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல இயக்குநர்களில் ஒருவர் தான் இயக்குநர் நெல்சன்.
இவர், இயக்கத்தில் முதல் முதலில் “கோலமாவு கோகிலா” திரைப்படம் வெளியான வெற்றி நடைப்போட்டது. “பிளாக் காமெடி க்ரைம்” பாணியில் உருவான இந்த திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியானது. இந்த திரைப்படம் ரூ.73 கோடி வசூலை அள்ளியது.
இதனை தொடர்ந்து, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இதில் இரண்டு படங்கள் வெற்றியடைந்தாலும் பீஸ்ட் படு தோல்வியடைந்தது.
நெல்சன் திலீப்குமார் மனைவியா இது?
இந்த நிலையில், நெல்சன் திலீப்குமார் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றும் பொழுது மோனிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆத்விக் என்கிற மகனும் உள்ளார்.
நெல்சன் திலீப் குமாரின் மனைவி மோனிஷா சின்னத்திரை பிரபலங்களுக்கு மிக நெருக்கமானார்.
அதே சமயம், ஃபேஷன் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். இவர், திரையில் முகம் காட்டாவிட்டாலும் instagram பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கிறார்.
அந்த வகையில், மோனிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |