ரம்யா கிருஷ்ணனுடன் விவாகரத்தா? உண்மை தான்.. வம்சி கொடுத்த Reply
நடிகை ரம்யா கிருஷ்ணன்- இயக்குனர் கிருஷ்ணா வம்சி தம்பதிகளின் விவாகரத்து சர்ச்சைக்கு கிருஷ்ணா வம்சி தரமான பதிலடிக் கொடுத்துள்ளார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன்
தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
இவர் சினிமாவிற்கு நுழைந்த காலக்கட்டத்தில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்று நடிக்கக் கூடியவர்.
90ஸ் காலப்பகுதி தொடக்கம் இப்போது இருக்கும் 2கே கிட்ஸ் காலம் வரை பிரபலமான மூத்த நடிகையாக இருந்து வருகிறார்.
சினிமாவில் போல்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விவாகரத்து உண்மையா?
இந்த நிலையில், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பலமொழிகளிலும் இன்றும் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் அவருடைய கணவரை விவாகரத்து செய்து விட்டார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக இருந்தது.
இது குறித்து இயக்குநர் வம்சி பேசுகையில், “ நானும் என்னுடைய மனைவியும் வேலை நிமித்தம் தற்போது பிரிந்திருக்கிறோம். ஆனால் எங்களின் பிரிவு நிரந்தரம் இல்லை. தற்போது வலைத்தளங்களில் பரவும் செய்திகள் உண்மை இல்லை. என்னுடைய மனைவி மிகவும் அன்பானவர், எல்லோருடனும் அன்பாக பழகுவார்.
என்னுடைய குடும்பத்தை மிகவும் அக்கறையுடன் கவனித்து வருகிறார். வெளியில் இருப்பது போன்று ரம்யா வீட்டில் இருக்க மாட்டார். அவர் மிகவும் வேடிக்கையான ஒரு நபர். அதே நேரத்தில் புத்திசாலி எல்லா விஷயங்களையும் மிகவும் சாதாரணமாகவும் கூர்மையாகவும் யோசித்து செயல்படுவார்...” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |