பரிதாப நிலையில் காலமானார் இயக்குநர் பாரதி ராஜா
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று(10.06.2026) காலமானார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (ஜூன் 10) காலமானார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம்வந்த பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இயக்குநர் பாரதிராஜா சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலையில் காலமானார்.

அவரது மகன் மனோஜ் மறைவிலிருந்து பாரதிராஜா உடல்நலம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரையுலகில் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கினார்.

கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை கருத்தம்மா உள்ளிட்ட படங்கள், தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.
45 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் பங்காற்றியவர் பாரதிராஜா. தற்போது இவருடைய மறைவு அனைவருக்கும் வருத்தத்தை தந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |