பிரபல இயக்குனர் பாலா விவாகரத்து - மனைவியை பற்றிய வெளியான திடுக்கிடும் தகவல்
பொதுவாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் விவாகரத்து செய்வது தொடர் கதையாகி விட்டது. ஹாட் டாப்பிக்காக இருந்த சமந்தா, நாக சைதன்யா, தனுஷ், ஐஸ்வர்யா என பலர் விவாகரத்து செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக இயக்குனர் பாலாவும் தனது 17 வருட மண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.
இவருக்கு கடந்த 2004-ம் ஆண்டு முத்துமலர் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரார்த்தனா என்கிற பெண் குழந்தை உள்ளது. 17 வருட மணவாழ்க்கைக்கு பிறகு, அவர்கள் அதை விட்டு தற்போது வெளியேற முடிவு செய்துள்ளனர்.
பாலாவுக்கும், மனைவி மலருக்கும் சில வருடங்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் நான்கு ஆண்டுகளாகவே ஒருவரைவிட்டு ஒருவர் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இருவருக்கும் முறைப்படி அவர்களது உறவை முறித்துக்கொள்ள பரஸ்பரமாக குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இருவரும் மார்ச்-5ம் தேதி முறைப்படி விவாகரத்து செய்துகொண்டு அவர்களது 17 வருட மண வாழ்க்கையை முறித்துக்கொண்டுள்ளனர். இவர்களுன் பிரிவுக்கு பாலா மீதும், மனைவி மீதும் குற்றச்சாட்டுகள் இணையத்தில் வெளியாகி வந்தன.
அதில் மனைவி மலர், பிரபல அரசியல் தலைவராக இருந்த மகனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.