கொரோனாவால் உயிரிழந்த மனைவி! திடீரென பிரபல இயக்குனர் இரண்டாவது திருமணம்
பிரபல இயக்குனர் அருண் ராஜா காமராஜ், மனைவி இறந்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இயக்குனர் அருண்ராஜா
தமிழ் திரையுலகின் பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொண்டு தற்போது இயக்குனராக வலம் வருபவர் தான் அருண்ராஜா காமராஜா. இவரது மனைவி சிந்துஜா கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.
உயிரிழந்த மனைவியின் உடலைக்கூட தொட்டுப் பார்க்க முடியாமல் தூரத்தில் நின்று அவதானித்த புகைப்படம் அனைவரது கண்களிலும் கண்ணீர் வரவழைத்தது.
மனைவி உயிரிழப்பிற்கு பின்பு வருத்தத்துடன் காணப்பட்ட அருண்ராஜாவிற்கு பலரும் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் தனது குடும்பத்தினர் ஏற்பட்டினால் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
தனிமையில் தவித்து வந்த அருண்ராஜாவிற்கு பெற்றோர்கள் கடந்த 29ம் தேதி பெண் ஒருவரை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.