அனல் பறக்கும் ஓட்டிங்! ரச்சிதாவின் கணவர் தினேஷ் யாருக்கு வாக்கு செலுத்தியுள்ளார் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாக்குபதிவுகள் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் ரச்சிதாவின் கணவர் தினேஷ் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
ரச்சிதா அவருடைய கணவரை பிரிந்து இருந்தாலும் முதல் நாளில் இருந்தே வாழ்த்துக்களை கூறி மனைவிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.
அதை தொடர்ந்து தினமும் ரச்சிதாவிற்காக பதிவுகளை வெளியிட்டு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பழங்குடியினராக இருக்கும் அணியினர் எவ்வளவோ தொல்லை கொடுத்தும் தன்னுடைய நிலையில் இருந்து மாறாமல் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்.
ரச்சிதாவுக்கு வாக்கு செலுத்திய தினேஷ்
இந்த பதிவை பலர் பாராட்டி வருகிறார்கள்.
அது மட்டும் அல்லாமல் இன்று தான் ரச்சிதாவுக்கு தான் வாக்கு செலுத்தி இருக்கிறேன் என்பதை பகிர்ந்து இருக்கிறார்.
இதேவேளை, நாமினேஷனின் எதிர்பாராத பல போட்டியாளர்கள் சிக்கியுள்ளனர். பார்வையாளர்கள் விறுவிறுப்பாக வாக்குகளை பதிவிட்டு வருகின்றனர். பார்க்கலாம் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதை.