தண்ணீர் பாட்டில் மூடியின் நிறம் வெவ்வேறு நிறத்தில் இருப்பது ஏன்?
நாம் வெளியில் வாங்கும் தண்ணீர் பாட்டில் மூடி வெவ்வேறு நிறத்தில் காணப்படும் நிலையில், இதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆம் நாம் வாங்கி பருகும் மினரல் தண்ணீர் பாட்டில்களில் மூடியின் நிறம் அவ்வப்போது மாறுபட்டிருக்கும். ஆனால் இதற்கும் ஒரு காரணம் உள்ளதாம்.
இந்தியாவில் 1970ம் ஆண்டில் முதன்முதலாக வாட்டில் பாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பெரும்பாலான நகரங்களில் இதனை தான் மக்கள் வாங்கி பருகுகின்றனர்.
குறித்த பாட்டிலில் காணப்படும் மூடியின் நிறம், அதில் உள்ள தண்ணீரின் விபரத்தை கூறுகின்றதாம்.
ஐந்து வகையான நிறங்களில் மூடி உள்ள நிலையில், அதற்கான அர்த்தத்தினை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
பாட்டில் மூடியின் அர்த்தம்
பாட்டில் மூடி நீல நிறத்தில் காணப்பட்டால், அந்த தண்ணீர் ஒரு ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட தண்ணீர் என்று அர்த்தமாம். பெரும்பாலான கடைகளில் இந்த நிற பாட்டில் தான் விற்கப்படுகின்றது.
பச்சை நிற பாட்டில் மூடி காணப்பட்டால், அந்த நீரில் சுவைகள் சேர்க்கப்பட்டிருப்பதை குறிக்கின்றது. மேலும் இந்த நீரில் சற்று வித்தியாசமான சுவையும் நீங்கள் அனுபவிக்க முடியும்.
வெள்ளை நிறத்தில் பாட்டில் மூடி காணப்பட்டால், குறித்த நீர் இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்டது என்பதை குறிக்கின்றது.
கருப்பு நிறத்தில் மூடியை கொண்ட வாட்டர் பாட்டிலில் நிரப்பப்பட்டிருக்கும் நீரில் காரத்தன்மை கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் விலை சற்று அதிகமாக காணப்படும் நிலையில், சாதாரண நீரை விட இது ஆரோக்கியமானதாகும்.
மஞ்சள் நிறத்தில் தண்ணீர் பாட்டில் மூடி காணப்பட்டால், குறித்த நீரில் வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் போன்றவை கலந்துள்ளது என அர்த்தம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |