படவிழாவுக்கு என்னை அழைக்கவே இல்லை! நடிகை த்ரிஷாவின் காட்டமான பதிவு வைரல்
அண்மையில் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சூர்யா, RJ பாலாஜி உட்பட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டர்.
இந்நிலையில், படத்தின் ஹீரோயின் ஆன நடிகை த்ரிஷா மாத்திரம் பங்கேற்காதது இணையத்தில் பேசுபொருளாகியிருந்தது.

படக்குழுவுக்கும் நடிகை த்ரிஷாவுக்கு ஏதேனும் முறன்பாடுகள் இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
த்ரிஷா பதிவு
இந்நிலையில் நடிகை த்ரிஷாவுக்கும் படக்குழுவுக்கும் பிரச்சனை உள்ளதென்பதை த்ரிஷாவின் பதிவு தற்போது உறுதி செய்துள்ளது.

இசை வெளியீட்டு விழாவுக்கு போகாதது ஏன் என ஒருவர் கேட்க, த்ரிஷா அதற்கு பதில் அளித்துள்ளார். "எனக்கு அழைப்பே வரவில்லை" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது த்ரிஷாவுக்கு மட்டும் தனியாக டீசர் வெளியிட்டு இருக்கும் நிலையில், அதற்கு நெட்டிசன் ஒருவர் 'த்ரிஷா படத்தில் இருப்பதையே மறந்துவிட்டேன்' என கமெண்ட் செய்திருக்கிறார்.
அதற்கு த்ரிஷா "நானும் மறந்துவிட்டேன். இப்போதாவது அவர்கள் reminder செட் செய்தார்களே" என பதில் அளித்துள்ளார்.