சர்க்கரை நோயாளிகள் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க
சர்க்கரை நோய் வருவதற்கு காரணம் இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாக சுரப்பது, சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது ஆகியவை இந்த நோய் வருவதற்கு காரணமாகும்.
இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும் இந்த நோய் வந்துவிடும். பெரும்பாலும் இந்த நோய் இந்தியாவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நோய் உடல் பருமன் உள்ள 100லிருந்து 80 சதவீத பேரை அதிகமாக பாதிப்பதாக கூறப்படுகிறது.
தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானம்!
நோய் வராமல் தடுப்பது எப்படி?
- மாவுச்சத்துள்ள உணவு வகைகளையும் கொழுப்புச் சத்துள்ள உணவு பொருட்களையும் குறைவாக சாப்பிட வேண்டும்.
- இனிப்பு அதிகமாவுள்ள உணவு வகைகளை குறைப்பது மிக அவசியம்.
- எண்ணெய் பொரித்த, வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
- குளிர்பானங்களை குடிப்பதை குறைத்து கொள்வது மிக அவசியம்.
- தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி/உடற்பயிற்சி செய்தால் இதை தடுக்கலாம்.
- உடல் எடையை சீராக வைப்பது மிகவும் அவசியம்.
மறந்தும் கூட இதை சாப்பிடாதீங்க
பேரீட்சை- பேரீச்சம்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும், எனவே சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம் பழத்தை தவிர்க்கவும்.
உலர் திராட்சை- உலர் திராட்சை பழத்தில் குளுக்கோஸ் அதிகம் இருப்பதால், இதை சாப்பிடும் போது நம் உடலிலும் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது, எனவே இதனை சாப்பிட வேண்டாம்.
வெள்ளை ரொட்டி- நீரிழிவு நோயாளிகள் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது, எனவே வெள்ளை ரொட்டியை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
சப்போட்டா- இனிப்பு அதிகம் நிறைந்த அதே சமயம் கிளைசெமிக் குறியீடும் மிக அதிகமாக உள்ள சப்போட்டா பழத்தை சாப்பிட வேண்டாம்.
உருளைக்கிழங்கு- கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும், எனவே இதனை தவிர்க்கவும்.
தலைமுடி பிரச்சினைக்கு மின்னல் வேகத்தில் ஒரே தீர்வு...