சர்க்கரை நோய் வருமா இல்லையா? என்பதை பரிசோதனை இல்லாமலே கண்டறிவது எப்படி?
பொதுவாக பலருக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பது குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. முதலாவதாக முறையில் உங்கள் வயது அடிப்படையில் கணக்கிடப்படும். 2-வது பாரம்பரியம் முறையில் உங்கள் தாய், தந்தை, உடன் பிறந்தவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அதன் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும்.
3-வது உங்களது BMI அல்லது உடல் எடை கணக்கிடப்படும். 4-வதாக உங்கள் இடுப்பின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடப்படும் அடுத்து, 5-வது உடற்பயிற்சி செய்யாதவர்கள், அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு என்ற அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்த மதிப்பெண்களை கூட்டிப்பார்த்தால் வரும் மதிப்பெண் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா? இல்லையா என்பதை ரத்த பரிசோதனை செய்யாமல் எளிய முறையில் கண்டுபிடித்து விடலாம்.
இந்த மதிப்பெண் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உங்கள் மருந்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளலாம்.