ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா?
நாம் சாப்பிடும் உணவுகளில் சர்க்கரை அதிகளவில் கலந்துள்ளது. இனிப்புகள், குளிர் பானங்கள், பழங்கள், பழச்சாறுகள் இவை அனைத்திலும் சர்க்கரை கூடுதலாக உள்ளது.
பொதுவாக நம் உடலுக்கு சர்க்கரை அவசியம்தான். ஆனால், சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை நாம் சாப்பிட்டால் நமக்கு கேடுதான் வரும். நாம் சாப்பிடும் உணவுகளில் மறைமுகமாக கலந்திருக்கும் சர்க்கரைகள் உடலில் கலோரிகளை அதிகரித்துவிடும். இதனால் ஒருவருக்கு உடல் எடை அதிகரிக்கும்.
சிலருக்கு நீரிழிவு நோய் வரும், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் கூட ஏற்பட்டு விடும். இவை அனைத்திற்கும் காரணம் நாம் சாப்பிடும் உணவுகளில் மறைந்திருக்கும் அதிகப்படியான சர்க்கரை தான்.
ஆனால், இந்த சர்க்கரையை நாம் 1 மாதத்திற்கு சாப்பிடாமல் இருந்து வந்தால் நம் உடலில் என்ன அதிசயம் ஏற்படும் என்று பார்ப்போம் -
உடல் எடை
நாம் ஒரு மாதத்திற்கு உணவிலிருந்து சர்க்கரையை குறைக்கும்போது, நம்மை அறியாமலேயே உடல் எடை குறையும். நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.
சர்க்கரை நோய்
சர்க்கரையை தவிர்க்கும் போது நம் உடலில் இருக்கும் ஒட்டுமொத்த கலோரிகள் குறைய ஆரம்பிக்கும். சர்க்கரை கொண்ட உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் அவை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.மேலும், டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்திவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |