சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வாக அமையும் கேழ்வரகு.. அடிக்கடி ஏன் சாப்பிட வேண்டும்?
நீரிழிவு நோயாளிகள் நோயை கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சிகளோடு சரியான உணவு முறையில் கேழ்வரகு சேர்த்து வந்தால் ஆரோக்கியமான முறையில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம். ஏனெனில் உணவு மூலம் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பது என்பது எளிதானது அல்ல, ஏனெனில் இதை அவ்வபோது ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது நல்லது.
சர்க்கரை வியாதியை வேகமாக கட்டுக்குள் வைக்க குறுக்கு வழிகள் இல்லை என்பதை முதலில் நீரிழிவு இருப்பவர்கள் புரிந்துகொண்டாலே எப்போதுமே சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம். ஆய்வுகளின் படி நீரிழிவு நோயை கட்டுப்படுத்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான முழு தானியங்களில் கேழ்வரகு முக்கியமானதாக கருதப்படுகிறது.
தினசரி இந்த நுகர்வு ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். நீரிழிவு நோய்க்காக கேழ்வரகு என்பது இப்போதைய உணவு அல்ல. அது பாரம்பரியமாகவே நமது உணவில் பிரதானமானது. அரிசி போன்ற தானியங்களை காட்டிலும் கேழ்வரகு முக்கியமானது. இது நல்ல கார்போஹைட்ரேட்டுகளின் வளமான மூலமாகும். இது சிறியதாக உள்ளது.
அரிசி, மக்காச்சோளம் அல்லது கோதுமையுடன் ஒப்பிடும் போது முழு தானியத்திலும் பாலிபினால்கள், கால்சியம் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளது.நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் கேழ்வரகை வெள்ளை அரிசி மற்றும் கோதுமைக்கு நல்ல மாற்றாக சொல்லப்படுகிறது.
இது ரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை பராமரிக்க செய்கிறது. மேலும் இது நார்ச்சத்து உள்ளடக்கத்தை கொண்டிருப்பதால் பசியை தகக் வைத்துகொள்வதோடு செரிமான வேகத்தையும் பராமரிக்க செய்கிறது. அதோடு இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும் செய்கிறது.
கேழ்வரகில் மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளது.