சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடுவது ரொம்பவே நல்லதாம் ! அது என்னென்ன தெரியுமா?
அதிர்ஷ்டவசமாக, மழைக்காலங்களில் குறைவான GI உள்ள பழங்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த பழங்கள் ஒவ்வொன்றிலும் 55-க்கும் குறைவான GI உள்ளன.
ஆகவே இந்த வகையான பழங்கள் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றது.
இப்போது மழைக்காலங்களில் கிடைக்கும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற பழங்களைக் காண்போம். இந்த பழங்களை அச்சமின்றி சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
பேரிக்காய்
நார்ச்சத்து அதிகம் நிறைந்த பேரிக்காய், உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது. ஆகவே இது மறைமுகைமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுகிறது. பொதுவாக உடல் பருமன் சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளுள் ஒன்றாகும். அதோடு பேரிக்காயில் GI அளவானது 40-க்கும் குறைவாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற சிறந்த பழங்களுள் ஒன்றாகும்.
பீச்
சதைப்பற்றுள்ள பீச் பழம் தனித்துவமான சுவையைக் கொண்டது. இத்தகைய பீச் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்று கூறப்படுகிறது. ஏனெனில் இதில் உள்ள GI அளவு 42 ஆகும். அதோடு இதில் கலோரிகள் குறைவு மற்றும் சீரான எடையை பராமரிக்க சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும்.
ப்ளம்ஸ்
மழைக்காலங்களில் கிடைக்கும் மற்றும் பெரும்பாலானோர் விரும்பும் பழம் தான் ப்ளம்ஸ். இது உயர் இரத்த சர்க்கரை கொண்ட சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியமான மற்றும் சாப்பிட ஏற்ற பழமாக கூறப்படுகிறது. நற்பதமான ப்ளம்ஸ் பழத்தில் உள்ள GI அளவு 40 மற்றும் இதில் நன்மை விளைவிக்கும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது.
ஆப்பிள்
வருடத்தின் அனைத்து நாட்களும் கிடைக்கும் பழம் தான் ஆப்பிள். ஆப்பிள் இயற்கையாகவே இனிப்புச் சுவையைக் கொண்டது மற்றும் இது சர்க்கரை நோயாளிகளின் இனிப்பு உணவுகளின் மீதான நாட்டத்தை நிரப்புகிறது. இதில் உள்ள GI அளவு 39. ஆகவே இது சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி சாப்பிட ஏற்ற அற்புதமான பழம்.
செர்ரி
கோடைக்காலம் மற்றும் மழைக்காலங்களில் கிடைக்கும் பழம் தான் செர்ரி. இந்த சிறிய பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது மற்றும் சாப்பிட பாதுகாப்பானதும் கூட. ஏனெனில் இதில் பொட்டாசியம், ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகமாக இருப்பதோடு, GI அளவு மிகவும் குறைவாக 20 தான் உள்ளது.