நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு என்னென்ன விடயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோய்
இன்றைய காலக்கட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வயது வரம்பின்றி அனைவருக்குமே வருகின்றது. இதற்கு நமது தவறான வாழ்க்கைமுறையும், தவறான உணவுமுறையும் தான் காரணம் என்று மருத்துவர்கள், நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பானது ஏற்படும் பட்சத்தில் அவர் முழு கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். தான் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலும் கட்டுப்பாடுகளை மேற்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும்.
ஏனெனில் நமது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் பட்சத்தில் அது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு நாம் சரியான உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடைபிடிக்க வேண்டிய விடயம்
ஆம் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் உணவானது மிகவும் சத்தான உணவாக இருந்தாலும், அதில் நிச்சயம் ஒரு கீரை இருக்க வேண்டுமாம். நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு கீரை மிகவும் சிறந்தது என மருத்துவர் கூறுகின்றனர்.
நீரிழிவு நோயாளிகள் தினமும் இரவு ஒரு வெண்டைக்காய் மற்றும் ஒரு பாகற்காயை துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு மறுநாள் காலை எழுந்ததும் அந்த தண்ணீரை குடித்து வந்தால், நீரிழிவு நோய் அளவு கட்டுக்குள் இருக்குமாம்.

வெந்தய கீரையை வீட்டில் வளர்ப்பது மிகவும் எளிதாகும். வெந்தயத்தை முளைக்கட்டி அதனை ஒரு கூடையில் போட்டு வைத்தாலே அது தானாக வளர்ந்துவிடும். இந்த கீரையை நீரிழிவு நோயாளிகள் தினமும் உட்கொள்வது மிகவும் சிறந்தது.
வெந்தய கீரையை 3 கைப்பிடியளவு எடுத்து சுத்தப்படுத்தி நறுக்கி எடுத்துக் கொண்டு, இதனுடன் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் இவற்றினை சேர்த்து வேக வைத்து சூப் போன்று தயாரித்து குடிக்கலாம். இதனை தினமும் காலையில் எடுத்துக் கொண்டால் நல்ல பலனை பெற முடியும்.

இந்த சூப்பை குடித்த பின்பு 10 நிமிடங்களுக்கு பின்பு வேறு உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் நடைபயிற்சி, யோகா போன்றவற்றினை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை ரத்த சர்க்கரை அளவை வெகுவாக குறைக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |