யுவன் இல்லையென்றால் எங்கள் குடும்பம் நடுத்தெருவில் வந்திருக்கும்... - நடிகர் தனுஷ் ஓபன் டாக்
யுவன் இல்லையென்றால் எங்கள் குடும்பம் நடுத்தெருவில் வந்திருக்கும் என்று நடிகர் தனுஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பிரிவுகளில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார்.
தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
மனம் திறந்து பேசிய தனுஷ்
சமீபத்தில், ஒரு விழாவில் பேசிய தனுஷ், யுவன் சங்கர் ராஜா இல்லையேன்றால் எங்கள் குடும்பம் நடுத்தெருவில் நின்றிருக்கும். மிகவும் கஷ்டமான சூழலில் தான் ‘துள்ளுவதோ இளமை’ படத்தை எடுத்தோம்.
அப்படத்தில் மனதை மயக்கும் பாடல்களை யுவன் சங்கர் ராஜா கொடுத்தார். அப்படம் வெற்றியடைய இவரின் பாடல்கள் தான் உதவியாக இருந்தது’ என்றார்.