தனுஷிற்கு ரஜினி கொடுத்த அதிர்ஷ்ட பரிசு: விவாகரத்து பிரச்சினையில் அதனை திருப்பி கொடுப்பாரா?
சமீபத்தில் இரு தினங்களாக இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் விடயம் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம் என்னவெனில் தனுஷ் ஐஸ்வர்யாவின் விவாகரத்து பிரச்சினையே.
இவர்களின் பிரிவிற்கு காரணம் என்ன என்பது இதுவரை தெரியாத நிலையில், பலரும் பல காரணங்களைக் கூறி வருகின்றனர். இதில் மீண்டும் ஐஸ்வர்யாவை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் ரஜினி இந்தியாவை கொண்டாடும் நபர்... அவரைக் கஷ்டப்படுத்தக்கூடாது என்று ரஜினி ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
ஆனால் தனுஷ் தரப்பினரோ, ரஜினியின் பெண் என்றும் தனுஷ் என்றும் பிரபலங்கள் என்று பார்க்காமல் சாதாரண நபர்களாக பார்க்கவும், தேசிய விருது பெற்றிருந்தாலும் நாங்களும் சாதாரண மனிதர்கள் தான் என்று கூறி வருவதுடன் பிரபலங்கள் என்ற கண்ணோட்டத்தில் இல்லாமல் இரண்டு மனங்களின் வலிகளை புரிந்து கொண்டு பாருங்கள் என்று கூறி வருகின்றனர்.
இதனை விடாமல் ரசிகர்கள், இத்தனை நாட்களாக இந்த எளிமை எங்கே சென்றது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சௌந்தர்யா விவாகரத்து செய்த போது அவரது மகன் வேத் சிறுவன் என்றும் விபரம் அறியாததால் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் உங்களது மகன்களோ நன்கு விபரம் அறிந்தவர்கள் என்று கூறி வருகின்றனர்.
மேலும் ரஜினிகாந்த் இரண்டு பேரன்களின் நிலையினைக் கண்டு தான் மிகவும் மன வருத்தத்தில் உள்ளார் என்றும் பெரும் பரபரப்பாக பேசப்படுகின்றது.
இந்நிலையில் மருமகன் தனுஷிற்கு ரஜினி அற்புதமான ருத்ராட்சம் ஒன்றினை வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட பின்பே தனுஷிற்கு அதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டம் ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது ரஜினியின் பெண்ணையே வேண்டாம் என்று கூறியுள்ள தனுஷ், மாமனார் ரஜினிகாந்த் வழங்கிய அந்த ருத்ராட்சத்தினை திருப்பிக்கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.