போயஸ் கார்டனுக்கும் அரசியலுக்கும்... தனுஷ் அரசியலுக்கு வருவாரா? கஸ்தூரி ராஜா கொடுத்த தெறி பதில்!
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு அவரது தந்தை கஸ்தூரி ராஜா அளித்துள்ள பதில் தற்போது இணையத்தில் படு வைராலாகி வருகின்றது.
தனுஷ் அரசியலுக்கு வருவாரா?
சென்னையில் நடைபெற்ற தனியார் கல்வி நிறுவன நிகழ்வில் நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா கலந்துகொண்டார். அப்போது, போயஸ் கார்டனுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “சென்னையில் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் இடம் என்றால் அது கோபாலபுரம்தான். கலைஞர் வாழ்ந்த இடம், பல அரசியல் மாற்றங்கள் உருவான இடம் அது. இளையதளபதி விஜயும் அங்கு வரப்போகிறார் என்று கூறுகிறார்கள். வரட்டும். ஆனால், நமக்கு அரசியல் தேவையில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது குடும்பத்திலிருந்து யாராவது அரசியலுக்கு வருவார்களா என்ற கேள்விக்கு, பதில் கொடுத்த அவர், “எனது குடும்பத்தில் இருந்து யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதற்கு வேண்டாம் என்று சொல்ல நாங்கள் யார்?

எனக்கு வயதாகிவிட்டது; என்னால் அரசியலுக்கு வர முடியாது.ஆனால், எனது மகன்கள் வரலாம், பேரன்கள் வரலாம்” என்று தெரிவித்தார்
அதனை தொடர்ந்து, “தனுஷ் அரசியலுக்கு வருவாரா?” என்ற கேள்விக்கு, “அது எனக்குத் தெரியாது. அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது” என்று கஸ்தூரி ராஜா பதிலளித்துள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |