தனுஷ் பட நடிகையா இவங்க? ஆளே அடையாளம் தெரியாம இருக்காங்களே
”புதுக்கோட்டையில் இருந்து சரவணன்” என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த நடிகை அபர்ணாவின் தற்போதைய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ”புதுக்கோட்டையில் இருந்து சரவணன்” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை அபர்ணா.
இந்த திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்டான்லி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியானது பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகி இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை தான் பெற்றது.
அதில், 'நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு' என்ற பாடல் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது.
அபர்ணாவின் தற்போதைய நிலை
இந்நிலையில் சமீபக்காலமாக நடிகைகளின் தற்போதைய புகைப்படங்கள் மற்றும் அவர்கள் வாழ்க்கை பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில், தனுஷிற்கு ஜோடியாக நடித்த அபர்ணாவின் தற்போதைய புகைப்படமொன்று வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ABCD, கண்ணுக்குள்ளே போன்ற படங்களில் நடித்த அபர்ணா இளம் வயதில் ஒல்லியாக அழகாக இருந்தார், தற்போது உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியாமல் மாறி போய் இருக்கிறார். சிறு வயது முதலே நடனம், இயக்கம், தயாரிப்பில் ஆர்வம் கொண்ட அபர்ணா பல நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற ரியாலிட்டி ஷோ மற்றும் ஒரு சமையல் நிகழ்ச்சியையும் இவர் தான் தயாரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையில், கடந்த 2011ஆம் ஆண்டு பரணி என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகள் ஒருவரும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |