இட்லி கடை ஷூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து- ஒரு மணி நேரத்தை தாண்டி எரியும் இடம்
இட்லி கடை படபிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தான் இட்லி கடை.
இந்த திரைப்படத்தில் தனுஷ், நிதயா மேனன், அருண் விஜய், ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்ட நிலையில், அஜித்தின் திரைப்படம் வெளியாகியதால் இட்லி கடை திரைப்படம் வெளியாகும் நாள் தள்ளிப்போயுள்ளது.
தீ விபத்து
இந்த நிலையில் இட்லி கடை படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.
இட்லி கடை திரைப்படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு தேனியில்தான் நடைபெற்றது. இதற்காக தேனியில் மிகப்பெரிய செட் போடப்பட்டிருந்தது. இங்கு சுமார் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று, அதன் பின்னர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காற்று பலமாக அடிப்பதால் தீ சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொளுந்து விட்டு எரிகிறது எனக் கூறப்படுகிறது.
தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தீ விபத்து ஏற்பட்ட படப்பிடிப்புத் தளத்தில் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |