எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரிக்கு பதிலாக வரும் பிரபல நடிகை - குஷியில் ரசிகர்கள்
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்திற்கு பதிலாக தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஒருவர் களமிறங்க போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டு வருகிறது. சின்னத்திரை சீரியல்களில் மிகப்பெரும் வரவேற்பை இந்த சீரியல் பெற்றுள்ளது.
இதில் குணசேகரனின் கதாபாத்திரத்திற்கு முழு ரசிகர் பட்டாளமுமே உள்ளது. இந்த நிலையில் குணசேகரன் ஈஸ்வரியை தர்ஷன் திருமண விஷயத்திற்காக தாக்கி அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் இருந்து வருகிறார்.

இன்றைய எபிசோட்டில் நந்தினி மற்றும் ரேணுகா ஈஸ்வரியை பார்க்க மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
ஆனால் கதிர் அவர்களிடம் எங்கே போறீங்க என கேட்டதற்கு, கதிர் ஈஸ்வரி கண்விழித்தது தெரிந்த விடயம் தெரிந்து விட்டால் குணசேகரனிடம் செல்லி விடுவார்கள் என நினைத்து பொய் செல்கின்றனர்.
ஆனால் ஞானமும் கதிரும் கேட்க உண்மையை சொல்ல இப்படி எபிசோட் போய்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ஈஸ்வரி கதாபாத்திரத்திற்கு பதிலாக பிரபல நடிகை வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல நடிகை
அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை தேவயானி தானாம். ஈஸ்வரி கதாபாத்திரம் மருத்துவமனையில் கோமாவில் இருந்ததை போல காட்டப்பட்டு வந்தது.
இதுகனிகாவிற்கு வரமுடியாமல் போனதற்கு தான் காரணம் எனப்பட்டது. தற்போது ஈஸ்வரி கண் விழித்து நலமாக உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் தேவயானி தான் நடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |