ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் அம்மன்தான் உதவி செய்தாங்க... - நடிகை தேவயாணி நேர்காணல்
ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் அம்மன்தான் எங்களுக்கு உதவி செய்தாங்க என்று நடிகை தேவயாணி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகை தேவயாணி பேசுகையில்,
நான் ரொம்ப சாமி கும்பிடுவேன். காளிகாம்பாள் அம்மன் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். பிறகு ஆஞ்சநேயர். வேலைக்கு கிளம்பும்போது ஆஞ்சநேயர் சாமி கோவிலை சுற்றிவிட்டுதான் கிளம்புவேன்.
நான் மட்டும் இல்லை. எங்கள் வீட்டில் எல்லோருமே அப்படித்தான். வாரம், வாரம் சாமிக்கு வடமாலை சாத்திடுவேன். தினமும் வீட்டில் பூஜை அறையில் பூ வைத்து வழிபாடு செய்வேன். என்ன சாப்பாடு செய்தாலும் முதலில் சாமிக்கு படைத்து விடுவேன்.
காலையில் எங்க வீட்டில் சாப்பிடுவதற்கு முன்னாடி சாமிக்கு படைத்து விட்டுவேன் நாங்க சாப்பிடுவோம்.
சின்ன வயதிலிருந்தே எனக்கு அம்மன் மேல பக்தி இருக்கு. திருமதி தமிழ் என்னுடைய இரண்டாவது படம். அதுல நான் என் கணவர்தான் டைரக்டர். நான் அதுல நான் தயாரிப்பாளராக இருந்தேன்.
அப்போது, எங்களுக்கு ரொம்ப பணம் வந்தது. அந்த நேரத்தில் எங்களுக்கு அம்மன் தான் உதவி செய்தாங்க. திடீரென்று எங்களுக்கு வங்கியில் லோன் கிடைத்தது. அந்த நேரத்தில் எங்களுக்கு அதிசயமாக அது நடந்தது.
இது தொடர்பான மேலும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்...