நரை முடியுடன் பாட்டியாக மாறிய தேவயானி: வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்
நடிகை தேவயாணி மிகவும் வயதான தோற்றத்தில் தண்ணீர் ஓடும் அணை ஒன்றின் கரையில் நிற்கும் புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது. தமிழ் சினிமாவில் தற்போது புகழின் உச்சத்தில் இருப்பவர் தான் நடிகை தேவயாணி. ஆம் ரசிகர்கள் மத்தியில் தற்போதும் நல்ல பெயரையே வைத்திருக்கின்றார். தமிழகத்தின் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்டவர் லட்சுமி. இ
வர் கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்த ஜெயதேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மும்பையில் வசித்து வந்த இந்த தம்பதிகளுக்கு திருமணத்திற்கு தேவயானி, நகுல், மையூர் என 3 பிள்ளைகள் உள்ளனர். தேவயாணி பல முன்னணி நடிகர்களுடன் நடித்தது மட்டுமின்றி பல வெற்றிப்படங்களையும் கொடுத்தார்.
இவரது தம்பி நகுல் பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். பின்பு காதலி விழுந்தேன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தற்போது தனது ரசிகர்களுக்கு வெற்றிப்படங்களை கொடுப்பதற்கு முயற்சி செய்து வருகின்றார். ஆனால் நடிகை தேவயாணியோ தற்போது வரை தனது ரசிகர்களை தக்க வைத்துக்கொண்டு வருகின்றார்.
ஆம் தற்போது சீரியலில் களமிறங்கியுள்ளதுடன் கன்னட படம் ஒன்றிலும் நடித்து வருகின்றார். மதகஜ என்ற கன்னட படத்தில் இவர் வயதான தோற்றத்தில் நடித்துள்ளதுடன், அப்படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.