கதாநாயகியாகும் தேவயானி மகள் - நெகிழ வைத்த அம்மா பாசம்
பிரபல நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா ராஜகுமாரன் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

நடிகை தேவயானி
90ஸ் களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை தேவயானி. இவர் இயக்குநர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார்.
பின்னர் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களில் மட்டுமே சினிமாவில் நடிக்கத்தொடங்கினார்.
பின்னர் குடும்பம் குழந்தை என தேவயானி சினிமாவை விட்டு விலகி வாழ ஆரம்பித்தார். இதன் பின்னர் இவருடைய மூத்த மகள் இனியாவை சரிகமப இசை நிகழ்ச்சியில் பாட வைத்தார்.
தற்போது இவருடைய இன்னொரு கனவும் நனவாகி உள்ளது. அதாவது தேவயானியின் இரண்டாவது மகள் நடிகர் பிரசாத்தின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

கதாநாயகியாக தேவயானி மகள்
ரஞ்ஜன் தி அட்வகேட்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா ராஜகுமாரன். நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.
தெலுங்கில் வெற்றி பெற்ற 'கோர்ட்: ஸ்டேட் vs எ நோபடி' படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. பிரசாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் தேவயானியின் மகள் பிரியங்கா ராஜகுமாரனுடன், தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரியும் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி உள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றது.
சமூக பிரச்சனைகளை மையமாகக் கொண்ட கோர்ட் டிராமாவாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து இந்த படத்தில் தெளிவாக உடுத்துக்காட்டப்படும் எனப்படுகின்றது.

தெலுங்கில் இந்த கதை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
தற்போது படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக 'அப்பு' படத்தில் தேவயானியுடன் ஜோடி சேர்ந்திருந்த பிரசாந்த், தற்போது அவரது மகளுடன் ஒரே படத்தில் நடிப்பது ரசிகர்களிடையே தனி கவனத்தை பெற்றுள்ளது.
மேலும் தேவயானி தன்னுடைய மகளை சினிமாவில் கதாநாயகியாக்க வேண்டும் என்ற கனவு நனவாகி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |