தேனிசைத் தென்றல் தேவாவின் இறுதிப் பாடலா? மீண்டும் வைரலாகும் ‘சோறுதான் முக்கியம்’!
தமிழ்த் திரையுலகில் தனது தனித்துவமான இசையாலும், முத்திரை பதிக்கும் குரலாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா.
அவரது இசைப் பயணத்தில் இடம்பெற்ற பாடல்கள் பல இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், தற்போது மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பாடல்தான் ‘சோறுதான் முக்கியம்’என்ற பாடல்.

வைரலாகும் இறுதி பாடல்
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி, ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைத்த திரைப்படம் ‘போராட்டம்’.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சோறுதான் முக்கியம்’ பாடலைத் தனது தனித்துவமான குரலில் பாடியிருந்தார் தேனிசைத் தென்றல் தேவா.
வெளியான காலத்திலேயே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், இணையத்திலும் வைரலாகி பெரும் கவனத்தை ஈர்த்தது.
ஆனால், தேவாவின் திடீர் மறைவுக்கு பின்னர் இந்தப் பாடல் ரசிகர்களால் மீண்டும் பகிரப்பட்டு, இணையத்தில் புதிய கோணத்தில் கவனத்தைப் பெற்றுள்ளதுடன் தேவாவின் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு கலைஞனின் குரல் காலத்தைக் கடந்தும் எவ்வாறு ரசிகர்களின் இதயங்களில் வாழ்கிறது என்பதற்கு இந்தப் பாடலும் ஓர் எடுத்துக்காட்டு.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |