புதிய சிம் கார்டு விதிகள்... நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
சைபர் மோசடி மற்றும் சிம் கார்டுகளை தவறாக பயன்படுத்துவதை ஆகியவற்றை தடுக்கும் வகையில், முக்கிய நடவடிக்கை ஒன்றை அரசு எடுத்துள்ளது.
புதிய சிம் வாங்க போறீங்களா?
இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு ஏற்ப நாட்டில் சைபர் கிரைம் சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றது.
அதிலும் சிம் கார்டு தொடர்பான மோசடி தான் இன்று அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் இவ்வாறான மோசடிகளை தவிர்ப்பதற்கு அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதாவது பிறர் பெயரில் சிம் கார்டு வாங்க முடியாத வகையிலும், சிம் எண்ணை தவறாக பயன்படுத்த முடியாத அளவிற்கு இந்த விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே நபர் ஒருவர் ஒன்பது சிம் கார்டுகள் வைத்திருப்பதற்கு மட்டுமே அனுமதியை அண்மையில் வழங்கியது. அவ்வாறு இல்லையெனில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
புதிய விதிகள் என்ன?
மொபைல் போன் சிம் கார்டுகளை வாங்குவதற்கான விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது. புதிய சிம் கார்டைப் பெற, e-KYC (Electronic Know Your Customer) நடைமுறை இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனி, e-KYC நடைமுறையை பூர்த்தி செய்யாமல் யாரும் புதிய மொபைல் எண்ணைப் பெற முடியாது.
e-KYC என்பது ஒரு நபரின் அடையாளம் மற்றும் முகவரி டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்படும் நடவடிக்கையாகும். e-KYC சரிபார்ப்பு இல்லாமல் இனி, சிம் கார்டு கிடைக்காது.
ஆனால் வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வரும் போது சிம் கார்டு வாங்கும் நடைமுறை எளிமையாகவே வைத்துள்ளது. அதாவது சிம் வாங்க உள்ளூர் எண்ணிலிருந்து OTP தேவைப்பட்டது.
ஆனால், புதிய விதியின்படி, இப்போது அவர்கள் தங்கள் மின்னஞ்சலில் OTP பெற்றுக் கொண்டு, சிம் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |