நோயாளிக்கு ரத்தத்திற்கு பதிலாக ஏற்றப்பட்ட சாத்துக்குடி சாறு! பரிதாபமாக உயிர் போன சோகம்
உத்தரப்பிரதேசம், பிரயாக்ராஜ்(அலகாபாத்) நகரில் டெங்கு நோயாளிக்கு ரத்த பிளாஸ்மா உடலில் ஏற்றுவதற்குப் பதிலாக சாத்துக்குடி சாற்றை உடலில் ஏற்றியதால் உயிரிழந்தார்.
ரத்தத்திற்கு பதிலாக சாத்துக்கு சாறு
பிரயாக்ராஜ் நகரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் டெங்கு நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு ரத்த பிளேட்லெட்டுகள் குறைந்ததால், உடனடியாக ரத்த பிளாஸ்மா தேவைப்பட்டது. இதையடுத்து, உள்ளூர் ரத்த வங்கியை அணுகி ரத்த பிளாஸ்மா கேட்டு வாங்கப்பட்டது.
ஆனால், ரத்த வங்கி வழங்கியது ரத்த பிளாஸ்மா என்று நம்பி நோயாளியின் உடலில் ஏற்றினர். ஆனால், ரத்த வங்கி ரத்த பிளாஸ்மாவுக்குப் பதிலாக சாத்துக்குடி சாறு இருந்ததால், அந்த நோயாளி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
ஆனால் ரத்த வங்கி கொடுத்த பேக்கிங்கில் பிளாஸ்மா என்று எழுதப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து உ.பி. துணை முதல்வர் பிரஜேஷ் பதக் கூறுகையில் “ முதல்வர் அலுவலகத்தின் உத்தரவின்பெயரில் ஒரு குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர், அவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
प्रयागराज में मानवता शर्मसार हो गयी।
— Vedank Singh (@VedankSingh) October 19, 2022
एक परिवार ने आरोप लगाया है कि झलवा स्थित ग्लोबल हॉस्पिटल ने डेंगू के मरीज प्रदीप पांडेय को प्लेटलेट्स की जगह मोसम्मी का जूस चढ़ा दिया।
मरीज की मौत हो गयी है।
इस प्रकरण की जाँच कर त्वरित कार्यवाही करें। @prayagraj_pol @igrangealld pic.twitter.com/nOcnF3JcgP