பிரசவ வலியால் துடிதுடித்த மனைவி! குழந்தையின் தலை வெளியே வருவதை பார்த்து பதறிய கணவர்...
இன்றைய காலகட்டத்தில் மருத்துவமனையில் தான் குழந்தைகள் பிறக்கின்றன. பழங்காலத்தை போல வீடுகளில் பிரசவம் பார்க்கப்படுவதில்லை.
ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் விஷயத்தில் அமெரிக்காவில் ஒரு பெண்ணிற்கு நடுரோட்டில் குழந்தை பிறந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கெய்லா தாம்சன், இவர் ரெயன் தாம்சன் என்பவரை திருமணம் செய்துள்ளார். ரெயன் டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் இணைந்து வாழ்ந்ததின் ஆதாரமாக கெய்லா கர்ப்பமானார். வழக்கம் போது அவர் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுவந்தார். இந்நிலையில் கெய்லாவிற்கு பிரசவ வலி வந்துள்ளது.
அப்பொழுது அவரது கணவரில் காரில் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அப்பொழுது யாரும் எதிர்பாராத வகையில் ரோட்டில் ஏற்பட்ட விபத்தால் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்தது. இந்த நெருக்கடிக்குள் இருவரும் காரில் சிக்கிகொண்டனர்.
இதனால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. காருக்குள்ளேயே பிரசவ வலி அதிகமானது.
வேறு வழியில்லாமல் ரெயன் அவசர உதவியை நாட்டினார். ஆனால் போனில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, குழந்தையின் தலை வெளியே வந்தது.
இறுதியாக அவரே தன் மனைவிக்கு பிரசவம் பார்த்தார். இறுதியாக டெலிவரி நிறுவனத்தின் ஊழியர் தன் மனைவிக்கு நடு ரோட்டிலேயே தன் டெலிவரி பார்த்துள்ளார். டிராபிக் ஜாம் ஏற்பட்டதால் தன் பெண் ஒருவருக்கு நடுரோட்டிலேயே குழந்தை பிறந்த சம்பவம் பெரும் வைரலாக பரவி வருகிறது.