அசைவப் பிரியர்களையும் கவரும் உருளைக்கிழங்கு பட்டர் மசாலா! - பண்ணலாமா?

Potato Healthy Food Recipes
By Vinoja Nov 25, 2026 09:28 AM GMT
Report

Restaurant-Style Potato Butter Masala : பொதுவாகவே சைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவர்கள் மட்டுமின்றி, அசைவ உணவுப் பிரியர்களுக்கும் மிகவும் பிடித்தமான காய்கறிகளில் உருளைக்கிழங்குக்கு எப்போதும் தனி இடம் உண்டு.

இதன் தனித்துவமான சுவையும், எந்த வகையான மசாலாக்களுடனும் எளிதில் ஒன்றிணைந்து ருசியை அள்ளித்தரும் தன்மையும் இதற்கான முக்கியக் காரணங்களாகும்.

அசைவப் பிரியர்களையும் கவரும் உருளைக்கிழங்கு பட்டர் மசாலா! - பண்ணலாமா? | Delicious Potato Butter Masala Recipe

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உருளைக்கிழங்கைக் கொண்டு ஏராளமான சுவையான உணவு வகைகளைத் தயாரிக்கலாம்.

வறுவல், பொரியல், மசாலா என எந்த முறையில் சமைத்தாலும் அதன் சுவை நிச்சயம் நாவில் நீர் ஊற வைக்கும். அதிலும் பட்டர் சேர்த்து மசாலாக்களுடன் பக்குவமாகத் தயாரிக்கும்போது அதன் ருசி இன்னும் கூடுதலாகிவிடும்.

வழக்கமாகச் செய்யும் உருளைக்கிழங்கு மசாலாவிலிருந்து சற்று வித்தியாசமாகவும், அதே நேரத்தில் சுவையில் அனைவரையும் கவரும் வகையிலும் ஒரு அருமையான உணவைத் தயாரிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்த ஹோட்டல் ஸ்டைல்  உருளைக்கிழங்கு பட்டர் மசாலாவை ஒருமுறை வீட்டிலேயே செய்து பாருங்கள்.

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மட்டுமின்றி சூடான சாதத்துடனும் சேர்த்து சாப்பிடுவதற்கு மிகவும் அற்புதமான காம்பினேஷனாக இருக்கும். குறைந்த பொருட்களைக் கொண்டே எளிதாகத் தயாரிக்கக்கூடிய, இந்தச் சுவையான உருளைக்கிழங்கு பட்டர் மசாலாவின் எளிய செய்முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.

அசைவப் பிரியர்களையும் கவரும் உருளைக்கிழங்கு பட்டர் மசாலா! - பண்ணலாமா? | Delicious Potato Butter Masala Recipe

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 1 கப் (தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கியது)

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1 (நீளவாக்கில் கீறியது)

கறிவேப்பிலை – 1 கொத்து

கொத்தமல்லி இலை – 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

தக்காளி விழுது – 1½ கப்

முந்திரி விழுது – ½ கப்

தயிர் – 2 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

ஏலக்காய் – 3

பிரிஞ்சி இலை – 1

கிராம்பு – 3

பட்டை– ½ துண்டு

மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்

மிளகாய் தூள் – ½ ஸ்பூன்

சீரகத் தூள் – ½ ஸ்பூன்

மல்லித் தூள் – ½ ஸ்பூன்

மிளகுத் தூள் – ½ ஸ்பூன்

கரம் மசாலா – ½ ஸ்பூன்

மேத்தி – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான

அளவு வெண்ணெய் – 2 ஸ்பூன்

எண்ணெய் – 2 ஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

அசைவப் பிரியர்களையும் கவரும் உருளைக்கிழங்கு பட்டர் மசாலா! - பண்ணலாமா? | Delicious Potato Butter Masala Recipe

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை அரைவேக்காடாக வேகவைத்து  ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தில்  எண்ணெய் மற்றும் வெண்ணெயைச் சேர்த்துச் சூடாக்க வேண்டும். அதில் சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் பிரிஞ்சி இலையைச் சேர்த்து வதக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் 

அசைவப் பிரியர்களையும் கவரும் உருளைக்கிழங்கு பட்டர் மசாலா! - பண்ணலாமா? | Delicious Potato Butter Masala Recipe

இந்த ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி: இனி இந்த 4 ராசிகளுக்கும் பொற்காலம் ஆரம்பம்!

இந்த ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி: இனி இந்த 4 ராசிகளுக்கும் பொற்காலம் ஆரம்பம்!

இப்போது பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் அரைவேக்காடாக வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

அதன்பின் உப்பு, மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து தக்காளி விழுதைச் சேர்த்து நன்றாகக் கலந்து, அதன் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.

பின்னர் முந்திரி விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் கரம் மசாலா மற்றும் கைகளால் நசுக்கிய கசூரி மேத்தியையும் சேர்க்கவும்.

அசைவப் பிரியர்களையும் கவரும் உருளைக்கிழங்கு பட்டர் மசாலா! - பண்ணலாமா? | Delicious Potato Butter Masala Recipe

பூண்டு வைத்து தூங்கும் பழக்கம்: நம்பிக்கையா? அறிவியல் உண்மையா?

பூண்டு வைத்து தூங்கும் பழக்கம்: நம்பிக்கையா? அறிவியல் உண்மையா?

இப்போது தயிரைச் சேர்த்து நன்றாகக் கலந்து, மிதமான தீயில் 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரேவியின் பதத்தைச் சரிசெய்து கொள்ளலாம்.

இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி, சிறிதளவு வெண்ணெய் சேர்த்து இறக்கினால் அவ்வளவு  தான் சுவையான உருளைக்கிழங்கு மசாலா கிரேவி தயார்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US