மிளகு, கறிவேப்பிலை வாசனை தூக்கலாக கத்திரிக்காய் உருளைகிழங்கு கறி.. செய்வது எப்படி?
பொதுவாக இந்தியர்களை விட இலங்கையில் உள்ளவர்களின் சாப்பாடு மற்றும் சமையல் பழக்கங்கள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
இலங்கையில் உள்ள சிங்களவர்கள் மிளகு, கறிவேப்பிலை அதிகமாக குழம்பில் சேர்த்து கொள்வார்கள். இதுவே இவர்களின் உணவு அவ்வளவு சுவையாக இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
கத்திரிக்காய், கிழங்கு வைத்து செய்யப்படும் கறிக்கு பெரிதாக எண்ணெய் ஊற்றாமல் தக்காளி மசித்து போட்டு சமைப்பார்கள். இதனால் கத்திரிக்காயில் உள்ள கசப்பு தெரியாமல் இருக்கும்.
ஏகப்பட்ட உடல் ஆரோக்கியத்தை வழங்கும் உருளைகிழங்கு கொஞ்சமாக எண்ணெய் வறுத்துக் கொள்வார்கள். ஏனெனின் கறியில் போடும் பொழுது வெந்து இருக்க வேண்டும் என்பதற்காகவும், சுவைக்காகவும் உருளை கிழங்கை பொறிக்கிறார்கள்.
அப்படியாயின், கத்திரிக்காய் பிடிக்காதவர்களுக்கு பொறித்து போட்டு இலங்கை ஸ்டைலில் எப்படி கறி வைக்கலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- கத்திரிக்காய்
- உருளை கிழங்கு
- தக்காளி
- வெங்காயம்
- பூண்டு
- கறிவேப்பிலை
- மிளகுத்தூள்
- கறித்தூள்
- மஞ்சள்தூள்
- மிளகாய்த்தூள்
- எண்ணெய்
கத்தரிக்காய்- உருளைகிழங்கு கறி
முதலில் கத்தரிக்காய், உருளைகிழங்கு இரண்டையும் சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கத்திரிக்காய், உருளைகிழங்கு இரண்டையும் தனித்தனியாக பொறித்துக் கொள்ளவும்.

அடுத்து, அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பூண்டு இரண்டையும் போட்டு வறுக்கவும். இதற்கிடையில் தக்காளிகளை கொஞ்சம் வெட்டி போட்டு மசித்துக் கொள்ளவும். அதையும், வெங்காயம் வதங்கியதும் மசித்த தக்காளியையும் ஊற்றவும். அதனுடன் மிளகாய்தூள், மசாலாத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு கொஞ்சம் தீயில் காய விட்டு தண்ணீர் கொஞ்சமாக விட்டு கிளறவும்.
அடுத்து, பொறித்து வைத்திருக்கும் கத்திரிக்காய், உருளை கிழங்கு இரண்டையும் போட்டு நன்றாக கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
கத்திரிக்காயில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விட்டு, மிளகு, கறிவேப்பிலை போட்டு கொஞ்சம் கிளறி விட்டு இறக்கினால் சுவையாக இருக்கும்.
கடைசியாக மண்சட்டியில் வேக விட்டு, பரிமாறினால் அந்த சுவையும் நன்றாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |