சுவையான மாம்பழ கேசரி... வெறும் 10 நிமிஷம் மட்டும் போதும்
மாங்காயை விட மாம்பழங்களை தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதற்கு முக்கிய காரணம் அதன் சுவை தான்...
கோடைக்காலம் வந்தாலே நம் நினைவில் வருவது மாங்காய் தான், கோடை என்றாலே மாங்காய் சீசன் தான். அதிலும் மாங்காயை விட மாம்பழங்களை தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதற்கு முக்கிய காரணம் அதன் சுவை தான்.
மாம்பழங்கள் வைத்து நாம் ஸ்மூத்தி, லஸ்ஸி, ஜாம், கேசரி என பல உணவு வகைகளை செய்து சாப்பிடுவது வழக்கம். அதுவும் மாம்பழ கேசரி செய்தால் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே குழந்தைகளுக்கு பிடித்தவாறு சுவையான மாம்பழ கேசரியை வீட்டிலேயே 15 நிமிடத்தில் எளிதாக எப்படி செய்து அசத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மாம்பழம் - 1
ரவை - 2 கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - தேவையான அளவு
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
தண்ணீர் - 2 கப்

செய்முறை
முதலில் மாம்பழத்தின் சதைப்பகுதியை மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அடித்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். தற்போது அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் ரவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அதே கடாயில் மேலும் சிறிதளவு நெய் சேர்த்து முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு ஒரு நிமிடம் மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் மாம்பழக்கூழ், சர்க்கரை, பால் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பின்னர் அதை அடுப்பில் வைத்து குறைத்த தீயில் சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை நன்கு கிளறிவிடவும்.
தற்போது அடி கனமான கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து மீதான தீயில் சூடாக்கி வறுத்த ரவை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். ரவை நன்கு வெந்து தண்ணீர் கிட்டத்தட்ட வற்றும் தருவாயில் மாம்பழக் கூழ் கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |