Blue Tickக்கு கட்டணம்! டுவிட்டர் கணக்கை Delete செய்வது எப்படி?
உலகில் பெரும் பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.
அன்றிலிருந்தே நிர்வாக குழுவில் இருப்பவர்கள் நீக்குவது, புதிய விதிகளை கொண்டு வருவது என அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் எலான் மஸ்க்.
மிக முக்கியமாக டுவிட்டரின் அம்சமாக பார்க்கப்படும் Blue Tickக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதாவது, Blue Tickக்கு மாதம் 8 அமெரிக்க டொலர்கள் பணம் செலுத்த வேண்டும், இது ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும், கட்டணம் செலுத்தும் நபர்களின் பதில்கள், குறிப்புகள் மற்றும் தேடல்களின் முன்னுரிமை வழங்கப்படும், இந்த வருமானம் சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்கும் நபர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என அறிவித்தார்.
இதற்கு பரவலாக எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், அதை கிண்டலடிக்கும் விதமாகவும் டுவிட் செய்துள்ளார் எலான் மஸ்க்.
— Elon Musk (@elonmusk) November 2, 2022
இந்த பதிவில் டுவிட்டர் கணக்கை முழுமையாக Delete செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
- உங்களது டுவிட்டர் கணக்கிற்குள் நுழைந்தவுடன் ... என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Settings and privacyக்குள் செல்லவும்.
- அதில் ”Deactivate your account” என்பதை கிளிக் செய்யுவும்.
- இதில் Deactivate என்பதை கொடுத்தவுடன், உங்களது பெயர், புரோபைல் என உங்களுடைய அனைத்து தகவல்களும் டுவிட்டரில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படும், twitter.com, iOS க்கான twitter, Androidக்கான twitter என எதிலும் உங்கள் தகவல்கள் இருக்காது.
- 30 நாட்களில் மீண்டும் உங்கள் கணக்கை நீங்கள் செயல்படுத்திக் கொள்ளலாம், நீங்கள் தவறுதலாக Deactivate என்பதை கிளிக் செய்துவிட்டால், 30 நாட்களில் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
- அந்த 30 நாட்களிலும் உங்களது கணக்கை நீங்கள் அணுகவில்லையெனில் நிரந்தரமாக உங்களது கணக்கு டுவிட்டரில் இருந்து நீக்கப்படும்.