நயன்தாரா பானியில் மகளுக்கு பெயர் வைத்த ரன்வீர் -தீபிகா ஜோடி.. குவியும் வாழ்த்துக்கள்
பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் இருவரும் இணைந்து மகளின் பெயரை தீபாவளி தினத்தில் வெளியிட்டுள்ளனர்.
ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை தீபிகா படுகோன். இவர் பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். சினிமாவில் டாப் நடிகையாக இருக்கும் தீபிகா கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் ரன்வீரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து சுமாராக 6 வருடங்கள் குழந்தையில்லாமல் இருந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி கடந்த பிப்ரவரி மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு, தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் இருவரும் ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

மகள் பெயர் என்ன தெரியுமா?
இந்த நிலையில், கடந்த மாதம் தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் தம்பதிகளுக்கு அழகிய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
இந்த குழந்தைக்கு கோலிவுட் ஸ்டைலில் “Dua படுகோன் சிங்” என பெயர் வைத்துள்ளார். ‘Dua ’ என்றால் பிரார்த்தனை என்று பொருட்படுகின்றது.

புகைப்படத்தில் Dua சிவப்பு நிற பாரம்பரிய உடையில் தீபாவளி கொண்டாட்டத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன் தீபாவளி வாழ்த்துக்களையும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        