வீட்டிலேயே தீபாவளி லேகியம் செய்வது எப்படி?
தீபாவளி என்றாலே பல கொண்டாட்டங்களுக்கு மத்தியில் அசைவ உணவுகள், பலகாரம் என ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்
இதனால் பலரும் செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், இதற்கு தீர்வாகிறது தீபாவளி லேகியம்.
எண்ணெய் தேய்த்து குளிப்பது, காரசார உணவுக்கு பின் தீபாவளி லேகியம் சாப்பிடுவது என தொடர்ந்து பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களில் ஒன்று.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 25 கிராம்
மல்லி - 50 கிராம்
மிளகு4, சீரகம், ஓமம் - 25 கிராம்(ஒவ்வொன்றும் தனித்தனியாக)
சுக்கு - ஒரு துண்டு
பனை வெல்லம் - 500 கிராம்
அதிமதுரம் - ஒரு துண்டு
சித்தரத்தை - ஒரு துண்டு
கண்டந்திப்பிலி - ஒரு டேபிள்ஸ்பூன்
அரிசித்திப்பிலி - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை
முதலில் அதிமதுரம், சுக்கு, மஞ்சள், சித்தரத்தை, கண்டந்திப்பிலி, அரிசித்திப்பிலி இவற்றை வெயிலில் காயவைத்து நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மல்லி, சீரகம், ஓமம், மிளகு போன்வற்றை லேசாக வறுத்துவிட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக பனைவெல்லத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சிய பின், நல்லெண்ணைய் ஊற்றி ஏற்கனவே பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.
கைகளால் உருட்டும் பதத்துக்கு வந்தவுடன் நெய், தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
தீபாவளி அன்று காலையில் நெல்லிக்காய் அளவுக்கு சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் அண்டாது.