எந்நேரமும் பேஸ்புக்கில் கடல.. கண்டித்த கணவனின் ஒற்றை வார்த்தைக்கு மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் 39.
இவர், இன்டீரியர் டெக்ரேசன் பணியை செய்து வருகிறார்.,இவருக்கு ரேவதி என்ற 34 வயதுடைய மனைவி இருக்கிறார்.
இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் 8 வயதுடைய பெண் குழந்தை மற்றும் 6 வயதுடைய ஆண் குழந்தை இருக்கும் நிலையில், ரேவதி செல்போன் மூலமாக திருவாரூர் பகுதியை சேர்ந்த நபரிடம், முகநூலில் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார்.
இதனை அறிந்த, கணவர் வெங்கடேஷ் பல முறை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்துபோன ரேவதி வீட்டில் தனியாக இருக்கையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக பெருமாநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.