திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்த உரிமையாளர்! பதறிப்போய் நின்ற ஜிம் கோச்
ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து ஹோட்டல் உரிமையாளர் உயிர் நீத்த சம்பவம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திடீரென மரணம்
மத்திய பிரதேசம் - இந்தூரைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் பிரதீப் ரகுவன்ஷி என்பவர் உடற்பயிற்சி செய்வதற்காக கோல்டன் ஜிம்மிற்கு தினமும் செல்வார்.
வழமைப்போல் சம்பவத்தினத்தன்றும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மேசையைப்படி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஜிம்மில் உள்ளவர்கள் அவரை பக்கத்திலிருந்த பண்டாரி மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
சோதனைக்குட்பட்ட போது இவர் மயங்கி விழுந்த போதே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வைரலாகும் வீடியோக்காட்சி
இந்த சம்பவம் குறித்து ஜிம்மிலுள்ளவர்கள் உறவினர்கள் உட்பட பொலிஸாருக்கு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்கள்.
இதன்போது ஒருவர,கூறுகையில், “பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவின் நண்பரான பிரதீப் ரகுவன்ஷி எங்களுடன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடிரென மயங்கி கீழே விழுந்துள்ளார். வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதில் இவர் மாரடைப்பால் இறந்து விட்டார்” என்று கூறினார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
इंदौर में स्थित गोल्ड्स जिम में होटल वृंदावन के मालिक प्रदीप रघुवंशी को हार्ट अटैक आ गया। उनकी उम्र 55 साल थी। घटना के बाद उन्हें अस्पताल ले जाया गया, जहां डाक्टरों ने उन्हें मृत घोषित कर दिया। कुछ दिनों बाद ही उनके बेटे की शादी होने वाली थी। #Indore #MadhyaPradesh pic.twitter.com/gx0FcFHIHJ
— Versha Singh (@Vershasingh26) January 6, 2023