பிடிவாதமாக இருந்த தொகுப்பாளினி டிடி... நரைமுடிக்கு கலர் செய்யும் காணொளி வைரல்!
நரைமுடிக்கு கலர் செய்யவே மாட்டேன்... என பிடிவாதமாக இருந்த தொகுப்பாளினி டிடி தற்போது colouring my hair for an ad shoot என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருவதுடன், விமர்சனங்களையும் குவித்து வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரின் நல்ல குணத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து சூப்பராக தொகுத்து வழங்கி வந்தார்.இவருக்கு பெரிய பீக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது நிச்சயம் காஃபி வித் டிடி தான்.

இந்த நிகழ்ச்சி அவரின் அடையாளமாவே மாறியது என்றால் மிகையாகாது. சின்னத்திரையில் மட்டுமன்றி விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும், சிங்கிளாகவே வாழ்வில் பல விடயங்களை சாதித்து மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை டிடி நிரூபித்து வருகின்றார்.

40 வயதை கடந்த நிலையிலும், இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில், சருமத்தையும் உடலையும் இளமையாகவே வைத்திருக்கின்றார்.
இவருக்கு கூந்தல் மாத்திரம் ஆங்காங்கே நரைத்திருந்தாலும் அதனை ஒருபோதும் கலர் செய்யப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

இந்நிலையில், தற்போது ஒரு விளம்பர படப்பிடிப்பிடிப்புக்கான தனது நரைமுடியை கலர் செய்ய வேண்டும் என பதிவிட்டு அவர் கூந்தலை கலர் செய்யும் காணொளியை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |