மாமியாரை வெட்டி உடலை பிரிட்ஜில் வைத்த மருமகள்! பின்னணியில் பகீர் சம்பவம்
காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் மற்றும் மாமியாரை காதலனை வைத்து மருமகள் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாமியாரை வெட்டி பிரிட்ஜில் வைத்த மருமணம்
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சங்கரி டே என்பவருக்கு அமர்ஜோதி என்ற ஒரு மகன் உள்ள நிலையில், பந்தனா கலிதா என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணமான சில நாட்கள் மகிழ்ச்சியாக இந்த ஜோடிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் வெறுத்த பந்தனா கலிதாவிற்கு அருப் தேகா என்பவர் நண்பராக அறிமுகமாகியுள்ளார்.
நண்பருடன் அதிகமாக பேசி வந்த கலிதா அவரை காதலிக்கவும் ஆரம்பித்துள்ளார். மருமகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மாமியார் இதுகுறித்து கலிதாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் அத்திரமடைந்த கலிதா மாமியாரை கொலை செய்து உடம்பை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்துள்ளார். பின்பு 3 நாட்கள் கழித்து கணவரையும் தனது காதலர் மூலமாக கழுத்தை நெரித்து கொலை செய்து உடம்பை வெட்டி பிரிட்ஜில் வைத்துள்ளார்.
பின்பு யாருக்கும் சந்தேகம் வராதபடி காட்டுக்குள் உடல் பாகங்களை போட்டுவிட்டு காவல்நிலையத்திற்கு சென்று, மாமியார் மற்றும் கணவரை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
சில நாட்கள் தனது காதலனுடன் வாழ்க்கையை தொடர்ந்த இவர் பொலிசாரிடம் சிக்கியது தான் சுவாரசியமாக கதையாகும்.
மாமியாரின் சகோதரர் தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை முறைகேடாக எடுத்து செலவு செய்துவிட்டதாக கூறி புகார் அளித்த நிலையில், தீவிரமாக பொலிசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். விசாரணையில் குறித்த வழக்கு பொய் என்று தெரியவந்துள்ளது.
ஆனால் மாமியாரின் வங்கிக் கணக்கினை சோதனை செய்த போது, கணக்கிலிருந்து கலிதாவே ஐந்து லட்சம் ரூபாயை எடுத்து செலவு செய்துள்ளது அம்பலமாகியுள்ள நிலையில், விசாரணையில் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.