தொளதொள சதையை கரைத்து எடை குறைய பேரிச்சம்பழத்தை எந்த அளவு சாப்பிடனும் தெரியுமா?
எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு நண்பராக உதவி புரியும் அற்புத உணவு தான் பேரிச்சை பழம்.
உடல் எடையைக் குறைக்க நினைத்தால் முதலில் உங்களுடைய உணவில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம்.
உங்களுடைய டயட்டில் மற்ற உணவுகளைக் காட்டிலும் புரத உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
புரத உணவுகள் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும்.
அப்படித்தான் பேரிச்சையும். பேரீச்சம்பழத்தில் குறிப்பிடத்தக்க அளவில் புரதம் உள்ளது.
புரதங்கள் தசைகள் உருவாக்கத்திற்கும் உதவுகின்றன. அதனால் தொளதொள சதைகள் குறைந்து, எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள நினைக்கிறவர்கள் புரத உணவான பேரிச்சம்பழத்தை சாப்பிடலாம்.
எவ்வளவு சாப்பிடலாம்?
உடல் எடை குறைக்க நினைக்கிறவர்கள் பேரிச்சம்பழத்தை அளவுடன் தான் சாப்பிட வேண்டும்.
ஒரு நாளைக்கு சராசரியாக 4 முதல் 5 பேரீச்சை பேரீட்சம்பழம் வரை சாப்பிடலாம்.
இதுவே நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களாக இருநதால் ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டோடு நிறுத்திக் கொள்வது நல்லது. அதிகம் சாப்பிட்டால் ஆபத்து.
எனவே அளவு என்பது எதிலும் முக்கியம். பேரிச்சை பழம் சாப்பிடுவதுடன் நிறுத்தி கொள்ளாமல் தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.
இது எடை இழப்பு பயணத்திற்கு மிகவும் உதவி புரியும்.