அசிங்கப்படுத்தும் கருவளையம் நிரந்தரமா போகணுமா? இந்த ஒரே ஒரு பொருள் போதும்....!
கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது.
முகத்தில் கண்களை சுற்றி மட்டும் கருப்பாக தெரி யும் அளவுக்கு கருவளையம் இருந்தால் என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
வாழைப்பழ தோலை வைத்து குணப்படுத்தலாம்
வாழைப்பழம் சிறந்த ஃபேஸ் பேக் போன்று செயல்படும் என்பது தெரியும்.
அதே போன்று வாழைப் பழத்தோலை தூக்கி எறியாமல் அந்த தோலின் இருமுனையை நறுக்கி விட வேண்டும்.
கைக்கு அடக்கமாக அந்த தோலை கத்தரித்து கண்களை மூடி கண்களுக்கு மேலும் கீழும் மெதுவாக வட்டவடிவில் மசாஜ் செய்ய வேண்டும்.
பத்துநிமிடம் தொடர்ந்து செய்தால் இதில் இருக்கும் பொட்டாசியம் சருமத்துக்கு வேண்டிய வைட்டமின் சத்தை கொடுப்பதோடு கருவளையத்தையும் போக்கும்.
கண்களுக்கு கீழ் கருவளையம் இல்லையே என்றாலும் கூட வாழைப்பழம் சாப்பிடும் போதெல்லாம் அந்த தோலை வீசியெறியாமல் கண்களுக்கு மசாஜ் கொடுங்கள். நிச்சயம் நல்ல மாற்றம் கிடைக்கும்.