மழைக்காலத்தில் தவறியும் காளான் சாப்பிடாதீங்க! ஏன் தெரியுமா? மருத்துவ விளக்கம்
கோடை காலத்தின் பின்னர் அதன் வெப்பத்தை தணிக்க மழை காலம் வரகிறது. இந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவாகளுக்கு நோய் தொற்றும்.
எப்போதம் போல மழைக்காலத்தில் உணவுகளை உட்கொள்ள முடியாது. இந்த பருவத்தில் பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
இந்த பருவத்தில் ஃபுட் பாய்சன் முதல் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் வரை என பல உடல் நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதே போல தான் இந்த மழைக்காலத்தில் காளான் சாப்பிட கூடாது என கூறுவார்கள். அது தெற்காக என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
காளான்
காளானில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் அதிகளவில் வைட்டமின் டி காணப்படுகின்றது. இது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் பி யும் உள்ளது.
இதை நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லதாக கருதப்படுகிறது. இது தவிர காளான் பொட்டாசியம் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் மூலமாகும். இதை மழைக்காலத்தில் சாப்பிட கூடாது என்பதற்கான காரணம் விஞ்ஞான ரீதியாக கூறப்பட்டுள்ளது.
காளான் ஈரமான மண்ணில் தான் வளரும். இந்த பருவத்தில் ஏற்கனவே மழை பெய்யும் போது பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் மண்ணில் அதிகம் காணப்படும். இவை காளானுக்குள் செல்கின்றன.
இந்த நிலையில் காளானை சாப்பிடும் நபர் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் பன்மடங்கு அதிகம் உள்ளன. இதன் காரணமாக தான் மழைக்காலத்தில் காளான் சாப்பிட வேண்டாம் என்று சொல்லப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |