முட்டையை எந்த பொருளுடன் சாப்பிடக்கூடாது? தெரிஞ்சிக்கோங்க மக்களே
ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்டுள்ள முட்டையில் புரதச்சத்து அதிகமாக காணப்படுகின்றது. இவை உடம்பின் தசைகளை பலப்படுத்துகின்றது.
ஆனால் முட்டையுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத சில உணவுப்பொருட்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
முட்டையுடன் சாப்பிடக்கூடாத பொருட்கள்
முட்டையுடன் இறைச்சியை சேர்த்து சாப்பிட்டால், சோம்பல் பிரச்சினை ஏற்படும். ஏனெனில் முட்டை உடனடி ஆற்றலை அளிக்கும் நிலையில், இறைச்சி மந்தமான உணர்வினை ஏற்படுத்தும்.
முட்டையுடன் சர்க்கரையை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நச்சாக மாறுமாம். காரணம் இதில் வெளியேறும் அமினோ அமிலம் ரத்தம் உறைவினை ஏற்படுத்துகின்றது.

இதே போன்று சோயா பாலுடன் முட்டையை சாப்பிட்டால் உடம்பிற்கு தீங்கு ஏற்படும். காரணம் புரதத்தை உறிஞ்சும் செயல்பாட்டில் தடை ஏற்படுகின்றது.
டீயுடன் முட்டையைச் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்பட்டு உடம்பில் பிரச்சினை ஏற்படுகின்றது.
முலாம்பழத்தினையும் முட்டையுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. மேலும் பால் பொருட்களையும் முட்டையுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
