இறப்பதற்கு முன்பு அலறிய டான்ஸர் ரமேஷ்! கம்பால் தாக்கிய இரண்டாவது மனைவி: அம்பலமான காணொளி
துணிவு படத்தில் நடித்த டான்சர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இவரை இரண்டாவது மனைவி தாக்கும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
டான்சர் ரமேஷ்
டான்ஸர் ரமேஷ் டிக் டாக்கில் தனது நடனத்திறமையின் மூலம் பிரபலமான ரமேஷ் பின்பு பிரபல ரிவியில் டான்ஸராக இருந்தார். தற்போது படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், அஜித் நடித்த துணிவு படத்தில் பாடலுக்கு அவருடன் நடனமாடியுள்ளார்.
பின்பு ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்திலும் நடனமாடியுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 10வது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்ட அவரின் இறப்பு காரணம் என்ன என்பது பலரின் கேள்வியாக இருக்கின்றது.
இந்நிலையில் டான்ஸர் ரமேஷை அவரது இரண்டாவது மனைவி கம்பால் தாக்கும் காட்சியினை முதல் மனைவி வெளியிட்டுள்ளார்.

இந்த காட்சியில் ரமேஷ் கையில் டேபிள் ஃபேன் ஒன்றினை வைத்து கெஞ்சுவது தெரிகின்றது. மற்றொரு புறம் அவரது மனைவி மற்றும் மகள் இருவரும் அவரை சாகக் கோருகின்றனர்.
ஒரு சமையத்தில் அவரது இரண்டாவது மனைவியின் மகள் தூக்கு கயிறு வேண்டுமா என்று கேட்பதும், காணொளியின் இறுதியில் அவரது இரண்டாவது மனைவி கையில் கம்புடன் அமர்ந்திருப்பதும் பதிவாகியுள்ளது.
நேற்று அவருடைய பிறந்தநாள் என்பதால் தனது முதல்மனைவியை பார்க்க சென்ற நிலையில் 10வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதற்கு காரணம் அவரது இரண்டாவது மனைவி தான் என்று கூறப்படும் நிலையில், இவரது பல ஆண்டு கனவு என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        