பிறந்த நாளில் தற்கொலை செய்த டான்சர் ரமேஷ்! இவரின் பல வருட கனவு என்ன தெரியுமா?
துணிவு படத்தில் நடித்த டான்சர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இவரது பல வருட கனவு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
டான்சர் ரமேஷ்
டான்ஸர் ரமேஷ் டிக் டாக்கில் தனது நடனத்திறமையின் மூலம் பிரபலமான ரமேஷ் பின்பு பிரபல ரிவியில் டான்ஸராக இருந்தார். தற்போது படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், அஜித் நடித்த துணிவு படத்தில் பாடலுக்கு அவருடன் நடனமாடியுள்ளார்.
பின்பு ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்திலும் நடனமாடியுள்ளதாக கூறப்படுகின்றது. நேற்று அவருடைய பிறந்தநாள் என்பதால் தனது முதல்மனைவியை பார்க்க சென்ற நிலையில் 10வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதற்கு காரணம் அவரது இரண்டாவது மனைவி தான் என்று கூறப்படும் நிலையில், இவரது பல ஆண்டு கனவு என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.
ரமேஷின் கனவு என்ன?
சமீபத்தில் ரமேஷ் காணொளி ஒன்றில் பேசிய போது, ஆரம்ப நாட்களில் நீ கடைசி வரையில் ரோட்ல குப்பை கொட்ட போற என பலரும் சொன்னாங்க. அதையெல்லாம் நான் பெருசா எடுத்துக்குறது இல்ல. எனக்கு என்ன தேவையோ அது கிடைக்கும்னு நம்புறேன்.
டான்ஸ்-ல எனக்கு பிரபுதேவா, லாரன்ஸ், சிம்பு ரொம்ப பிடிப்பது மட்டுமின்றி இவர்களை பார்த்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
ஒரு இரண்டு ஸ்டெப்பாவது பிரபுதேவா சாருக்கு கோரியோகிராஃப் செய்ய வேண்டும் என்று எனக்கு கனவு உள்ளது என்று கூறியிருந்தார். ஆனால் இவற்றையெல்லாம் நினைக்காமல் எப்படி தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்ற கேள்வியும் எழுந்து வருகின்றது.