Dance Jodi Dance : திருநங்கைக்கு யாரும் கொடுக்காத பரிசை கொடுத்த தவெக... ஆனந்த தருணம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் திருநங்கை வைத்த கோரிக்கைக்கு பதில் கிடைத்துள்ளது.

டான்ஸ் ஜோடி டான்ஸ்
பிரபல தொலைக்காட்சிகளில் மக்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சிகள் பல நடைபெற்று வருகின்றது.
இதில் பாடும் திறமை உள்ளவர்களுக்கு சூப்பர் சரிகம போல, ஆடும் திறமை உள்ளவர்களுக்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் என ஒரு நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பபடுகிறது.

தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி ஆரம்பகட்டத்தில் போட்டியாளர்களை தெரிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் நடுவராக நடிகை சினேகா, சிம்ரன், பிரசாந்த் ஆகியோர் இருந்து வருகின்றனர்.
கடந்த வாரம் இந் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தெரிவு செய்யபட்டார்கள். அதில் ஒரு திருநங்கை முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த கோரிக்கைக்கு இந்த வாரம் பதில் கிடைத்துள்ளது. இந்த காணொளி தற்போது அனைவர் மத்தியிலும் வைரலாகி வரவேற்பை பெற்றுள்ளது.