DJD 3 நிகழ்ச்சியில் திடீர் அதிர்ச்சி: ரவீனாவின் மூக்கில் ரத்தம் - நிகழ்ச்சி நடுவே நிறுத்தப்பட்டதா?
டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், சின்னத்திரை நாயகி ரவீனா ஆடிக் கொண்டிருக்கும் பொழுது ரவீனா மூக்கில் இருந்து ரத்தம் வடியும் காட்சி, அரங்கத்தினரை அதிர வைத்துள்ளது.
Dance Jodi Dance
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி Dance Jodi Dance.
இந்த நிகழ்ச்சியை இதுவரை காலமும் தொகுப்பாளர் விஜய் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த சீசனில் விஜே மணிமேகலை மற்றுமொரு தொகுப்பாளராக இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறார்.
அத்துடன் Dance Jodi Dance நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை சினேகா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இருவரும் இருந்தார்கள். இந்த சீசனில் நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய நடுவராக இணைந்துள்ளார்.
ரவீனாவுக்கு என்னாச்சு..
இந்த நிலையில், Dance Jodi Dance நிகழ்ச்சியில் பல இளைஞர்கள் தங்களின் திறமை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், ரவீனா மேடையில், சோகமான பாடல் ஒன்றுக்கு ஆடிக் கொண்டிருக்கும் பொழுது தவறுதலாக தரையில் விழுந்துள்ளார். ஆனாலும் அவர் நடனத்தை நிறுத்தவில்லை.
சிறிது நேரம் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது நடிகை ரவீனா மூக்கில் இருந்து ரத்தம் வடிய ஆரம்பிக்கிறது. இதனை பார்த்த அரங்கத்தினர் பாதியில், நிகழ்ச்சி நிறுத்தியதுடன், ரவீனாவை அந்த இடத்தில் இருந்து சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
நடுவர்களாக வந்தவர்களும் ரவீனாவுக்கு விபத்து ஏற்பட்டதால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இப்படியாக ப்ரோமோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது. காணொளியை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், ரவீனாவின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
